தீபாவளி முன் பணம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் கோவில்பட்டியில் போராட்டம்
கோவில்பட்டி, அக்.16: தீபாவளி முன்பணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி முன்பணம் வழங்கவில்லை. இந்தாண்டு அரசு அறிவித்த பின்னரும் தீபாவளி முன்பணம் வழங்க நகராட்சி நிர்வாகம் மறுத்து வருவதை கண்டித்து நேற்று தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் சுடலைமணி தலைமை வகித்தார். இதில், நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டு தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் சப்கலெக்டர் ஹூமான்சூ மங்களிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
Advertisement
Advertisement