வேப்பலோடை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி
குளத்தூர்,அக்.16: வேப்பலோடை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு ரூ1கோடி கடனுதவியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரையடுத்த வேப்பலோடை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் வேப்பலோடை பகுதியை சேர்ந்த பிச்சிபூ, செண்டுபூ, அன்னை, யமுனை, வண்ணம், வளர்பிறை, சந்திரன், குங்குமப்பூ ஆகிய 8 மகளிர் குழுக்களுக்கு ரூ1கோடியே 50ஆயிரம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு மகளிர் குழுக்களுக்கு கடன்தொகைக்கான காசோலையை வழங்கினார். கூடுதல் ஆட்சியர் செந்தில்வேல்முருகன், கூட்டுறவு சார்பதிவாளர் ரேச்சல் தெபேரா, கூட்டுறவு செயலாட்சியர் சுடலைமணி, வேப்பலோடை கூட்டுறவு சங்கசெயலாளர் கென்னடி, சரக மேற்பார்வையாளர் இருதயராஜ், பிடிஓக்கள் சசிகுமார், ஜவஹர், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், துணைச்செயலாளர் கல்மேடுராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணிஅமைப்பாளர் முத்துராஜ், மாவட்டபிரதிநிதி சத்யராஜன், வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணிராஜ், குதிரைக்குளம் முன்னாள் ஊராட்சிமன்றதலைவர் சண்முகையா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.