சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா
கழுகுமலை,ஆக.14: கழுகுமலை அருகே கே.வேலாயுதபுரம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தின் திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்வுக்கு பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜோதி சுப்புராஜ் தலைமை வகித்தார். தொழிலதிபர் மகேஸ்வரன் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ஜெய்சங்கர், ஒன்றிய பொருளாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர். இதில் திமுக கிளைச் செயலாளர் பெருமாள், வேலாயுதபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சுப்புராஜ், சாலமன், திமுக ஒன்றிய பிரதிநிதி முத்து கண்ணன், பாலமுருகன், பால்ராஜ், சதீஷ்குமார் மற்றும் ஊர் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement