பசுவந்தனை- எஸ்.கைலாசபுரம் சாலையை இருவழித்தடமாக மாற்றும் பணி
ஓட்டப்பிடாரம், டிச. 13: ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பசுவந்தனையில் இருந்து ஓசனூத்து, எஸ்.கைலாசபுரம் வரையிலான சாலையை ஒருவழித்தடத்தில் இருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் பாலம் அமைக்கும் பணிகளின் துவக்க நிகழ்ச்சி நேற்று குலசேகரநல்லூரில் நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் திலிப், ஒன்றிய திமுக துணை செயலாளர் லெட்சுமணன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி, தொண்டரணி கோபால். மேலும் தொழிலாளரணி கருப்பசாமி, கிளை செயலாளர்கள் சண்முகம், வேல்சாமி, சண்முகநாதன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement