சோரீஸ்புரம் பள்ளியில் விழிப்புணர்வு பிரசாரம்
Advertisement
தூத்துக்குடி, அக். 13: தூத்துக்குடி சோரீஸ்புரம் அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி பண்டிகையை விபத்து இல்லாமல் பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதுகுறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் யோகமணி சங்கர், சக்திவேல், விஸ்வநாதன், அந்தோணி ராஜ், தவசி உள்ளிட்டோர் தீபாவளி பண்டிகை நாட்களில் மாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?, தீக்காயம் ஏற்பட்டால் முதலுதவி செய்வது எவ்வாறு? காயம்பட்டவர்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Advertisement