குளத்தூரில் மாட்டு வண்டி போட்டி மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Advertisement
குளத்தூர்,அக்.13: குளத்தூர் பெருமாள் கோயில் புரட்டாசி உற்சவத்தையொட்டி மாட்டு வண்டி எல்கை போட்டியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
குளத்தூர் பெருமாள் கோவில் புரட்டாசி உற்சவத்தையொட்டி மாட்டுவண்டி எல்கை போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறியமாடு மற்றும் பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயங்கள் நடந்தது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு மாட்டுவண்டி போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நெல்லை, மதுரை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 68 ஜோடி காளைகள் கலந்து கொண்டு எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன. மூலக்கரை முத்து, செக்காரக்குடி வெற்றிமாறன் காளைகள், சீவலப்பேரி துர்க்காம்பிகை, கே.துரைச்சாமிபுரம் காளைகளுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கினர்.
Advertisement