தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது
தூத்துக்குடி, ஆக.13: தூத்துக்குடி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (14ம்தேதி) நடைபெறும் என கோட்டாட்சியர் பிரபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட கலெக்டரால் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்பேரில் தூத்துக்குடி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நாளை (14ம் தேதி) காலை 11 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளார்.