இடப்பிரச்னையில் தொழிலாளிக்கு வெட்டு
கோவில்பட்டி, ஆக. 13: கோவில்பட்டி அருகே இடப்பிரச்னையில் தொழிலாளிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகப்பெருமாள் (45). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதேபகுதி தெற்கு தெருவைச் சேர்ந்த அரியநாயகம் (35) என்பவருக்கும் இடையே இடப்பிரச்னை காரணமாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அரியநாயகம், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆறுமுகப்பெருமாளை சரமாரியாக வெட்டினார். பலத்த காயமடைந்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி அரியநாயகத்தை தேடி வருகின்றனர்.