சாலை விபத்தில் பெண் பலி
ஸ்பிக்நகர், ஆக.13:தூத்துக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து மனைவி முத்தாச்சி (48) வீட்டு வேலைகளுக்கு சென்று வந்துள்ளார். இவர் தனது மகள் ஐஸ்வர்யா, பேரன் லோகஸ்சாமி மற்றும் பேத்தி காயத்திரி ஆகியோருடன் ஆறுமுகநேரியில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மாமியாரை பார்த்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை எம்.சவேரியார்புரம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் காயமடைந்த முத்தாச்சி, ஐஸ்வர்யா, காயத்திரி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லேசான காயமடைந்த ஐஸ்வர்யா மற்றும் காயத்திரி முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றனர். முத்தாச்சி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துகுறித்து முத்தையாபுரம் எஸ்ஐ ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெயந்தி விசாரனை நடத்தி வருகிறார்.