பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி
உடன்குடி, டிச. 12:குலசேகரன்பட்டினம் பெருமாள் கோயில் தெரு, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் மகன் ஞானமூர்த்தி (27). கூலி தொழிலாளியான இவர், கடந்த டிச.8ம் தேதி குலசேகரன்பட்டினத்தில் இருந்து உடன்குடி ரோட்டில் பைக்கில் வந்தபோது எதிர்பாரதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக உடன்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி ஞானமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஞானமூர்த்தி தம்பி ஆறுமுகம்(22) அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement