முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் முன்னிலையில் தென்திருப்பேரை இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்
ஏரல், டிச. 12: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் தென்திருப்பேரை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். குரும்பூர் அருகேயுள்ள தென்திருப்பேரை பகுதியை சேர்ந்த மகேந்திரன், ஆத்தி பிரபாகர், காளிதாஸ், சத்யராஜ், ஆத்தி, பெரியகணேஷ், பிரவின்குமார், தங்கஆத்தி, முத்துராஜ், சண்முகவேல், சிவன்ராஜ், பாலமுருகன், முத்து, முத்துசெல்வம் உள்பட 25 இளைஞர்கள் மற்றும் மாற்றுக் கட்சி நிர்வாகி மான்சிங் ஆகியோர் பண்டாரவிளையில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் விஜயகுமார், வை. மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், தென்திருப்பேரை பேரூராட்சி செயலாளர் ஆறுமுகநயினார், உடன்குடி ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட ஜெ. பேரவை இணை செயலாளர் அமிர்தா மகேந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செல்வகுமார், வார்டு செயலாளர் பிரேம்சங்கர், அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.