தூத்துக்குடியில் செப். 16,17ல் தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கு
தூத்துக்குடி,செப்.12: கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன வரும் 16, 17 (செவ்வாய் மற்றும் புதன்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெறுகிறது. இதில், அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் சுந்தர் செயல்படுவார்.
Advertisement
Advertisement