வல்லநாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு
செய்துங்கநல்லூர்,செப். 12: வல்லநாட்டில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற சண்முகையா எம்எல்ஏ, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். கருங்குளம் யூனியன், வட வல்லநாடு, கலியாவூர் ஊராட்சி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வல்லநாட்டில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சண்முகையா எம்.எல்.ஏ., முகாமை துவக்கிவைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். நிகழ்வில் வைகுண்டம் தாசில்தார் ரத்தினசங்கர் மற்றும் துணை தாசில்தார் லிங்கராஜ், கருங்குளம் யூனியன் தனி அலுவலரும், பிடிஓவுமான ஆறுமுகநயினார், கருங்குளம் வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் பக்கபட்டி சுரேஷ், ஊராட்சி செயலர்கள், விஏஓக்கள், ஆர்ஐக்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை வட வல்லநாடு கலியாவூர் ஊராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.