புதிய சப்கலெக்டர் பொறுப்பேற்பு
கோவில்பட்டி,ஆக.12: கோவில்பட்டியில் புதிய சப்கலெக்டராக ஹூமான்சூ மங்கள் பொறுப்பேற்று கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் தவாப் மாதப்பூரைச் சேர்ந்த இவர், மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக். முடித்தவர். தொடர்ந்து 3 ஆண்டுகள் தனியார் வங்கியில் பணியாற்றி உள்ளார். பின்னர் 2023ம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வானையத்தால் நடத்தப்பட்ட சிவில் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு மாநில கேடரில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராக பணியாற்றினார். பின்னர் அவர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஹூமான்சூ மங்கள் நேற்று கோவில்பட்டி கோட்ட சப்கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பணியிட மாறுதலாகி செல்லும் கோட்டாட்சியர் மகாலட்சுமி மற்றும் தாசில்தார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சப்கலெக்டர் ஹூமான்சூ மங்கள் நிருபர்களிடம் கூறுகையில் ‘‘அரசின் திட்டங்கள் எந்தவித தடங்களுமின்றி மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் குறைகள் குறித்து எனது கவனத்துக்கு கொண்டு வந்தால் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இவரது மனைவி வைஷ்ணவி பால், தென்காசி கோட்டாட்சியராக நேற்று பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.