ஓட்டப்பிடாரம் கல்லூரியில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
ஓட்டப்பிடாரம், ஆக.12: தமிழ்நாடு அரசின் உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை சார்பில் ஓட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சண்முகையா எம்எல்ஏ தலைமையில் கல்லூரித் தாளாளர் கிரேசா ஜேக்கப், தாசில்தார் அறிவழகன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.