நாசரேத் நூலகத்தில் இலக்கிய மன்ற கூட்டம்
நாசரேத், நவ.11: நாசரேத் நூலகத்தில் நூலக வார விழாவை முன்னிட்டு இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது. வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பில் நடந்த இக்கூட்டத்திற்கு வாசகர் வட்டத்தின் தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். நூலகர் பொன் ராதா முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றார். இதையொட்டி ‘கவிமணியின் கவிதைகளில் சமூகப் பார்வையும், தமிழ்ப்பணியும்’ என்ற தலைப்பில் தமிழ் முகில் திருவை பாபு சிறப்புரை ஆற்றினார். பேராசிரியர் காசிராஜன், தேரி இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன் கருத்துரை ஆற்றினர். நிகழ்வில் எழுத்தாளர் மணிமொழிச்செல்வன், கவிஞர்கள் மூக்குப்பீறி தேவதாசன்,சிவா, டாக்டர் விஜய் ஆனந்த், தொழிற்சங்கத் தலைவர் கிருஷ்ணராஜ், மாணிக்கம், உடையார், ஜான் பிரிட்டோ, சுரேஷ், மந்திரம், சிவா, ரத்னசிங், கந்தசாமி லதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இலக்கிய ஆர்வலர் கண்ணன் நன்றி கூறினார்.