உலக திருக்குறள் கூட்டமைப்பின் ஆட்சிமன்ற ஆலோசனை கூட்டம்
நெல்லை, நவ. 11: உலக திருக்குறள் கூட்டமைப்பின் ஆட்சிமன்ற கூட்டம் கரூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஞானமூர்த்தி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஆதிலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வில் உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவரும், திருவள்ளுவர் மன்ற தலைவருமான கருத்தப்பாண்டி பங்கேற்று பேசினார். உலக திருக்குறள் கூட்டமைப்பின் பொருளாளர் சம்பத், அறக்கட்டளை பொருளாளர் சவுந்திரராஜன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரபு கிருஷ்ணன், துணைத்தலைவர் துரைப்பாண்டியன், துறை இயக்குநர் ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் முக்கிய ஆலோசனைகள் வழங்கினர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவை 2026ம் ஆண்டு பிப். 28ம் தேதி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அருகே நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.