கானம் பேரூராட்சியில் ரூ.17 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்
உடன்குடி, அக். 11: கானம் பேரூராட்சியில் ரூ.17 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். குரும்பூர் அருகேயுள்ள கானம் பேரூராட்சி அலுவலகம் எதிரே ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் வெங்கடேஸ்வரி தலைமை வகித்தார். துணை தலைவர் அந்தோணி காட்வின் முன்னிலை வகித்தார். பேரூராட்சி நிர்வாக அதிகாரி (பொ) உஷா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார்.
இதில் ஆர்டிஓ கவுதம், திருச்செந்தூர் தாசில்தார் தங்கமாரி, திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், விளையாட்டு அணி அமைப்பாளர் ஜனகர், ஒன்றிய செயலாளர்கள் திருச்செந்தூர் செங்குழி ரமேஷ், தூத்துக்குடி மத்திய ஜெயக்கொடி, நகர செயலாளர்கள் திருச்செந்தூர் வாள்சுடலை, கானம் ராமஜெயம், கானம் பேரூராட்சி முன்னாள் தலைவர் செந்தமிழ்சேகர், இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், வள்ளிவிளை வெங்கடேஷ், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.