பணிபுரியும் இடத்திலேயே உப்பள தொழிலாளர்களுக்கு மருத்துவமுகாம்
தூத்துக்குடி,செப்.11: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்படி, மாவட்ட சுகாதார நலத்துறை சார்பில் நடமாடும் மருத்துவக்குழுவினர் டாக்டர் ஷியாம்சுந்தர் தலைமையில் தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே ரத்த பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, கண்கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்புரை பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வரும் 16ம் தேதி கண் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ பரிசோதனையில் மாவட்ட உப்பு சங்கத்தலைவர் சந்திரமேனன், உப்பு ஆலோசகர் சரவணன் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமை தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் யாழினி தலைமையில் மருத்துவக்குழுவினர் மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement