கோவில்பட்டியில் பராமரிப்பின்றி சேதமான மின்கம்பம் மாற்றியமைப்பு பொதுமக்கள் பாராட்டு
கோவில்பட்டி, செப். 10: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் முன்புறம் சேதமடைந்த மின்கம்பத்தை ஊழியர்கள் அகற்றி புதிய மின்கம்பம் அமைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்த மக்கள் நன்றி கலந்த பாராட்டுத் தெரிவித்தனர். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் முன்புறம் அமைக்கப்பட்ட மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்தது. இதையடுத்து இதை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் செந்தில்ஆறுமுகம் தலைமையில் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால் சேதமடைந்த மின்கம்பத்தை ஊழியர்கள் அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டினர். இதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள் நன்றி கலந்த பாராட்டுத் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement