பைக் மீது லோடுவேன் மோதி தொழிலாளி சாவு
கோவில்பட்டி, செப். 10: கோவில்பட்டி வஉசி நகரைச் சேர்ந்தவர் கணேசன் (47). இவர், வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கில் இளையரசனேந்தல் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மரக்கடையில் லோடு ஏற்றுவதற்காக அவ்வழியாக வந்த லோடு வேன், கணேசன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் படுகாயமடைந்தார். தகவலறிந்து மேற்கு காவல்நிலைய போலீசார் சென்று கணேசனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுதொடர்பாக வேன் டிரைவர் கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் உத்தண்டகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement