பணிக்கநாடார்குடியிருப்பு பள்ளி என்எஸ்எஸ் திட்ட சிறப்பு முகாம்
உடன்குடி,அக்.9: பணிக்கநாடார்குடியிருப்பு கணேஷர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நல்லான்விளையில் வைத்து நடந்தது. கணேசர் பள்ளியின் செயலர் முருகன், ஆட்சி மன்ற குழு தலைவர் ராஜசேகர், ஆட்சி மன்ற குழு பொருளாளர் மோகன் ஆகியோர் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமினை துவக்கி வைத்தனர். முகாமின் சிறப்பு நிகழ்ச்சிகளாக மரக்கன்று நடுதல், பனை விதை விதைத்தல், பிளாஸ்டிக் பொருள் விழிப்புணர்வு பேரணி, துணிப்பை வழங்குதல், சிறுசேமிப்பிற்காக உண்டியல் வழங்குதல், கால்நடை சிகிச்சை முகாம், எய்ட்ஸ், போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் நடந்தது. கணேஷர் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் மௌலா தேவி, துணை தலைமை ஆசிரியர் ஜெசுதாசன், பள்ளி நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, முதுகலை உயிரியல் ஆசிரியர் சந்திரசேகர், முதுகலை பொருளியல் ஆசிரியர் சுரேஷ் காமராஜ், என்சிசி அதிகாரி ராஜ்குமார், பசுமை படை அலுவலர் ஜார்ஜ் ராஜதுரை ஆகியோர் ஒவ்வொரு நாட்களுக்கான நிகழ்ச்சியில் தலைமை வகித்தனர். மேலும் கால்நடை மருத்துவர் ஹரி மகேஷ் முகாமில் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார். நாட்டு நலப்பணித்திட்ட தூத்துகுடி மாவட்ட தொடர்பு அலுவலர் முருகேசன் முகாமினை பார்வையிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை கணேசன் பள்ளி நிர்வாகம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கண்ணன் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.