சாயர்புரம் போப் பள்ளி மாணவர்கள் சாதனை
ஏரல், அக்.9: முதல்வர் கோப்பைக்கான கையுந்து போட்டியில் சாயர்புரம் போப் நேமல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நாகப்பட்டினத்தில் 2025ம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கோப்பைக்கான கடற்கரை கையுந்து மாநில அளவிலான போட்டி நடந்தது. இதில் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடியதில் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர்கள் அரிஹரசுதன் மற்றும் நரேஷ் கார்த்திக் ஆகியோர் மாநில அளவில் முதலிடமும் வெற்றி பெற்று முதலமைச்சர் வழங்கும் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், பரிசு தொகை தலா ரூ.75 ஆயிரம் என பெற்றுள்ளனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த சாதனை படைத்த மாணவர்களையும், இவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் நீதியின் சூரியன், உடற்கல்வி இயக்குநர் பெஞ்சமின், உடற்கல்வி ஆசிரியர் எட்வின், மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த அவர்களது பெற்றோர்களையும், பள்ளி ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் ஐசக் பாலசிங், தலைமை ஆசிரியர் எட்வர்ட் ஜாண்சன்பால், திருமண்டல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், திருமண்டல நிர்வாக செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்சன் ஆகியோர் பாராட்டினர்.