முள்ளூரில் புதிய ரேஷன் கடை
குளத்தூர், செப்.9: முள்ளூர் கிராமத்தில் புதிய ரேஷன் கடையை மார்க்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முள்ளூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். பிடிஓக்கள் சசிகுமார், ஜவகர், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், முள்ளூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி, விவசாய அணி துணை அமைப்பாளர் மணிராஜ், வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்த், குதிரைக்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகையா, கிளை செயலாளர்கள் சண்முகராஜ், கிருஷ்ணமூர்த்தி பெருமாள்சாமி லட்சுமணன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.