தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தூத்துக்குடியில் ஓடும் காரில் தீ

தூத்துக்குடி, ஆக 7:தூத்துக்குடியைச் சேர்ந்த பாலசங்கரி என்பவர் நேற்று இரவு, தனது தாயை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அவர் டபிள்யூ.ஜி.சி ரோட்டில் சென்றபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. தொடர்ந்து காரில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பதற்றமடைந்த அவர் காரை நிறுத்திவிட்டு இறங்கினார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் விசாரித்தனர். மின்வயரில் ஏற்பட்ட உராய்வால் தீயால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் பாஜவினர் நீர்மோர் வழங்கல் உடன்குடி, ஆக.7: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் பக்தர்களுக்கு பாஜவினர் நீர் மோர் வழங்கினர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் ஆடிக்கொடை விழா கடந்த ஆகஸ்ட் 4ம்தேதி துவங்கி ஆகஸ்ட் 6ம்தேதி வரை மூன்று நாட்கள் விமரிசையாக தொடர்ந்து நடந்தது. இதையொட்டி பாஜவினர் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நீர், மோர், குளிர்பானங்கள் வழங்கினர். இதில் உடன்குடி ஒன்றிய பாஜ முன்னாள் தலைவர் அழகேசன், முன்னாள் நிர்வாகிகள் சின்னத்துரை, அரிகிருஷ்ணன், சிவகுமார், தமிழ்செல்வி, ஜயப்பன், முருகன், வைகுண்டராமன், பத்மாவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஹரிஹரபுத்திரன், குருசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

Related News