மணப்பாட்டில் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு
உடன்குடி, டிச. 6: உடன்குடி புதுமனை புது 2ம்தெருவை சேர்ந்தவர் பென்சிகர் மனைவி தமிழரசி(35). இவர், தனது தம்பி மகன் ஜோவன் (2) மற்றும் உறவினர் சகாயசானியா(26) ஆகியோருடன் மணப்பாடு திருச்சிலுவை கோயிலில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் ஆராதனை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். சகாயசானியா மொபட்டை ஓட்ட தமிழரசி, ஜோவன் ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர். மொபட், மணப்பாடு ஆர்ச் பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் வரும்போது பின்னால் டூவிலரில் வந்த வாலிபர்கள் மூவர், மொபட்டை வழிமறித்து தமிழரசியை தாக்கி அவர் அணிந்திருந்த இரண்டே கால் பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement