பட்டய பயிற்சி துவக்க விழா
தூத்துக்குடி, ஆக.6: தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26ம் ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியின் துவக்க விழா நடந்தது. தலைமை வகித்த மண்டல இணைப்பதிவாள ராஜேஷ் குத்துவிளக்கேற்றி கருத்துரை ஆற்றினார். பயிற்சி நிலைய முதல்வரும், பணி நிறைவுபெற்ற துணைப் பதிவாளருமான நா.சு.மணி வரவேற்றார். தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் கலையரசி, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் சாம் டேனியல்ராஜ், சிறப்பு விரிவுரையாளர் பாலசுப்பிரமணியம், பணிநிறைவு பெற்ற துணைப்பதிவாளர்கள் சங்கரலிங்கம், சந்திரசேகர், ஓய்வுபெற்ற கூட்டுறவு சார் பதிவாளர் சுப்பிரமணியன், செல்வி, கார்த்திகா தேவி, அனிதா குமாரி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பணிநிறைவு பெற்ற துணைப்பதிவாளர் முத்துசாமி நன்றி கூறினார்.