விவசாயிகள் கூட்டமைப்பினர்
கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி, ஆக. 6: வருவாய் சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவேரி, வைகை, கிறிதுமால், குண்டாறு, வைப்பாறு விவசாயிகள் கூட்டமைப்பினர் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட பொருளாளர் சின்னச்சாமி தலைமை வகித்தார். மத்தித்தோப்பு குருசாமி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் உத்தண்டுராமன் கருத்துரை ஆற்றினார்.
இதில் பங்கேற்ற ஞானபாண்டி, கணேசன், மாணிக்கம், கொம்மபையா உள்ளிட்ட திரளானோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதாவது கோவில்பட்டி தாலுகா அலுவலத்தில் வருமானம், குடியிருப்பு, சாதி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். மந்தித்தோப்பு கிராமம் கணேச நகர் மற்றும் அனைத்து பகுதிக்கும் விடுபட்டவர்களுக்கு உடனடியாக நத்தம் குடிமனைபட்டா வழங்க வேண்டும். ஜமாபந்தியில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.