இ-பைலிங் முறையை கண்டித்து சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளம், டிச. 5:நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதை கண்டித்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நீதிமன்றங்களில் உள் கட்டமைப்பு இல்லாமல் இ-பைலிங் முறை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதை கண்டித்து சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் கல்யாணகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து இ-பைலிங் முறையை கண்டித்து பேசினார். இதில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் வேணுகோபால், சுப்பையா, கிருபா, வினோத், மாணிக்கம், யேசுதாசன், செல்வ மகாராஜன், பிரின்ஸ், கபில் குமார், சிவ மீனா, எஸ்.ரோஸ்லீன், வி.ரோஸ்லீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.