கோவில்பட்டியில் விசிக ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி, டிச. 5: தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோவில்பட்டியில் நடைபெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, வரும் 28ம் தேதி கோவில்பட்டிக்கு வருகை தருகிறார். இதையொட்டி நேற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை வகித்தார். மாநில வழக்கறிஞரணி துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின் , மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் இளஞ்சேரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மண்டல முன்னாள் செயலாளர் தமிழினியன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் வரும் 28ம் தேதி கோவில்பட்டிக்கு விடுதலைச்சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். எனவே அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல் ராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.