கோவில்பட்டியில் மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்
கோவில்பட்டி, நவ.5: கோவில்பட்டியில் மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. கோவில்பட்டி காமராஜர் அரங்கத்தில் நடந்த இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த ஒன்றியச் செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் பேசுகையில் ‘‘சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாம் அனைவரும் கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருந்து திமுக கூட்டணி வெற்றிக்காகப் பாடுபட வேண்டும். கோவில்பட்டி தொகுதிக்கு வேட்பாளராக முதல்வர் யாரை நிறுத்தினாலும் வெற்றிக்காக பாடுபட வேண்டும்’’ என்றார். இதில் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சந்தானம், ஒன்றிய துணைச்செயலாளர் அழகுராஜ், சீனிவாசன், சின்னத்தாய், ஒன்றிய பொருளாளர் கண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் முருகன், அசோக்குமார், அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் அணி மாவட்டத் தலைவர் நாகராஜன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதேஸ்வரன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கணேசன், தொமுச நாகராஜன், மகளிர் அணி ஒன்றிய அமைப்பாளர் பாலம்மாள், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் உத்தரகுமார், மகளிர் தொண்டர் அணி ஒன்றிய அமைப்பாளர் பவானி, சட்டமன்ற தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் கற்பகம், விவசாயத் தொழிலாளர் அணி ஒன்றிய அமைப்பாளர் சந்திரகண்ணன், ஆதிதிராவிடர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கனகராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் பழனிக்குமார், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் செல்வகுமார், தகவல் தொழில்நுட்ப அணி அனிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தத்தின்போது அந்தந்தப் பாகத்தில் உள்ள வாக்காளர்களை விடுபடாமல் சேர்ப்பதற்கு கட்சியினர் உறுதுணையாக செயல்பட வேண்டும். தலைமைக்கழகம் அறிவிக்கும் கட்டளைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.