ஓட்டப்பிடாரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓட்டப்பிடாரம், ஆக 5: ஓட்டப்பிடாரத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஓட்டப்பிடாரத்தில் செயல்படும் யூனியன் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் அலெக்சாண்டர் என்பவரின் மரணத்திற்கு நீதிகேட்டு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் அன்னம்மாள் தலைமை வகித்தார். முன்னிலை வகித்த வட்டாரச் செயலாளர் திருமாலை, ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சைப் பெருமாள், வட்டாரத் துணைத் தலைவர சுந்தரபாண்டியன், உதவி வேளாண் அலுவலக சங்கத்தின் சிவா, மாவட்டத் துணைத்தலைவர் தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். செயற்குழு உறுப்பினர் சங்கர் குமார் நன்றி கூறினார்.