வை. வட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்
ஏரல், டிச. 2: வைகுண்டம் வட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மேற்கு மாவட்ட சமூக ஆர்வலர் அன்னை விஜி சரவணன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். வைகுண்டம் வட்டார பகுதி கொட்டியம்மாள்புரம் மணி முருகன் உள்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மேற்கு மாவட்ட சமூக ஆர்வலர் அன்னை விஜி சரவணனை புதுமனை அம்மாள் தோப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து தவெகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு வை. மேற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். இதில் கிளை செயலாளர் வேல், மாவட்ட மாணவரணி செயலாளர் அருள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரசமுத்து மற்றும் நிர்வாகிகள் வேல்முருகன், சவுந்தர்ராஜன், திருமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement