பிரகாசபுரம் புனித மிக்கேல் அதிதூதர் கெபியில் அசன விருந்து
நாசரேத், அக். 1: பிரகாசபுரம் புனித மிக்கேல் அதிதூதர் கெபியில் நடந்த அசன விருந்தில் திரளானோர் பங்கேற்றனர். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் புனித மிக்கேல் அதிதூதர் கெபியின் திருவிழாவை முன்னிட்டு சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது. பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்தினை தொடங்கி வைத்தார். முன்னதாக கெபியின் முன் ஜெபமாலை, நவநாள் ஜெபம், திருப்பலி நடந்தது. இதில் நாசரேத், பிரகாசபுரம், மாதாவனம், மூக்குப்பீறி, மறுகால் துறை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் மற்றும் இறை மக்கள், பங்கு மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Advertisement
Advertisement