ஸ்டேட் வங்கி சார்பில் கோவில்பட்டி ஜி.ஹெச்சுக்கு பேட்டரி ஆம்புலன்ஸ் வழங்கல்
கோவில்பட்டி, அக். 1: கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு தூத்துக்குடி ஸ்டேட் வங்கி சார்பில் பேட்டரியில் இயங்கும் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆம்புலன்ஸ் சாவியை கலெக்டர் இளம்பகவத்திடம் ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ஆல்வின் மார்ட்டின் ஜோசப் வழங்கினார். கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியின் சிஎஸ்ஆர் திட்டத்தின் மூலம் நோயாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.8.17 லட்சம் மதிப்புள்ள ஸ்ட்ரச்சருடன் கூடிய பேட்டரி ஆம்புலன்சுக்கான சாவியை தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத்திடம், ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ஆல்வின் மார்ட்டின் ஜோசப் வழங்கினார். தூத்துக்குடி சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் பிரியதர்ஷினி, கலெக்டர் இளம்பகவத்திடமிருந்து ஆம்புலன்ஸ் சாவியை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்கள் பாலகிருஷ்ணன், மோசஸ்பால், பாரத ஸ்டேட் வங்கியின் தூத்துக்குடி கிளை தலைமை மேலாளர் அகில் சீனிவாசன், துணை மேலாளர் பெஞ்சமின், முதுநிலை தலைமை மேலாளர் உஷா, மாவட்ட மேலாளர் துரைராஜ் தங்கம், இயக்குநர் எபனேசர் ஞானையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.