விளாத்திகுளம் வட்டார வேளாண் தோட்டக்கலை துறையில் தற்காலிக வேலைவாய்ப்பு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்
விளாத்திகுளம்,ஆக.18: விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் தற்காலிகமாக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில்‘‘விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள 61 வருவாய் கிராமங்களில் 2025ம் ஆண்டு காரிப் பருவதிற்கான விவசாயிகள் பயிர் செய்துள்ள பயிர்களின் விவரங்களை மின்னணு பயிர் கணக்கீட்டாய்வு செய்ய தற்காலிக பணிக்கு விருப்பம் உள்ள இளைஞர்கள் தேவைப்படுகின்றனர்.
விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களை சர்வே எண், உட்பிரிவு எண் வாரியாக மின்னணு முறையில் கைபேசி மூலம் பயிர் கணக்கீட்டாய்வு செய்வதற்கு விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஊதியமாக ஒரு சர்வே எண்ணிற்கு ரூ.19 தங்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும். விருப்பமுள்ள இளைஞர்கள் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை துறை அலுவலகம் அல்லது வேளாண் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். வேளாண் உதவி இயக்குநரை 9445828010 என்ற அலைபேசி எண்ணிலும், வேளாண் அலுவலரை 7708575642 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்’’ என்றனர்