உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா
தூத்துக்குடி, டிச.15:தூத்துக்குடியில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மில்லர் புரம் விகாசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வுச் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து ஒருங்கிணைத்த உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசினார்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வு சங்க மாநில தலைவர் மருதபெருமாள், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் செல்வகுமரன், சங்கத்தின் கிளை அமைப்பு தலைவர்கள் அற்புதராஜ், எப்போதும்வென்றான் மொட்டையசாமி, மேலக்கரந்தை அய்யனார், மேல கூட்டுடன்காடு ராமகிருஷ்ணன், செக்காரக்குடி ஆறுமுகம், புதுக்கோட்டை பொன்ராஜ், மேலத் தட்டப்பாறை சின்னத்துரை, குமெரட்டியாபுரம் பிச்சாண்டி, புதியம்புத்தூர் தமிழ்செல்வி, வேம்பார் பெரியசாமி, கோவில்பட்டி முத்து மாடசாமி, ஏரல் சுல்தான், குலசேகரன்பட்டினம் கமல் ஜவகர், கிருஷ்ணராஜபுரம் அந்தோணி ராஜ், தாளமுத்து நகர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கத்தின் தலைவர் பேச்சிமுத்து, துணை தலைவர் கமல் தனசேகர், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் சின்னதுரை, சகா கலை குழுவைச் சேர்ந்த முனைவர் சகா.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.