தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புத்தாண்டு முதல் வெள்ளியை முன்னிட்டு ஆலந்தலையில் சிறப்பு திருப்பலி

திருச்செந்தூர் ஜன. 4: திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையொட்டி நேற்று மதியம் 11.30 மணிக்கு ஆலய பங்குதந்தை சில்வெஸ்டர், வார வழிபாடு நடத்தினார். தொடர்ந்து மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் மறையுரை நிறைவேற்றப்பட்டது.

Advertisement

இதில் பங்குதந்தைகள் பன்னீர்செல்வம், விக்டர் லோபோ, செல்வன், பென்சிகர், கிராசியூஸ், பீட்டர் பவுல், பாக்ய பவுல், பாலன், லூசன், அமல், கார்லோ, இதயன், ஷிபாகர், டேவிட் சகாய வளன், ரத்தினராஜ், ஜார்ஜ், ஜோதிமணி, திருத்தொண்டர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக ரொசாரிமாதா சபையினர், ஊர் நலக்கமிட்டியினர், அருட்சகோதரிகள், பக்த சபைகள், அன்பியங்கள், மீனவ சங்கங்கள், கப்பல் மாலுமி சங்கம், அனைத்து பள்ளிகள் என அனைவரும் ஆயரிடம் கல்வி நிதியை வழங்கினர். அப்போது நாளை (5ம் தேதி) முதல் மணப்பாடு மறை வட்டத்திலுள்ள அனைத்து பங்குகளுக்கும் இயேசுவின் திரு இருதய சொரூபத்துடன் புனித மர்கரீத் மரியாளின் புனிதப் பண்டம் பவனியாக ஆலந்தலையில் இருந்து எடுத்துச் செல்லப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. நேற்று மாலை இயேசுவின் திரு இருதய சப்பரப் பவனி மற்றும் ஆசீர்வாதம் நடைபெற்றது. முதல் வெள்ளிக்கிழமை திருப்பலியில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News