திருத்துறைப்பூண்டியில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணி
திருத்துறைப்பூண்டி, அக்.30: திருத்துறைப்பூண்டியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணி தொடர்பாக மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அமுதா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
Advertisement
இக்கூட்டத்தில் வட்டாட்சியர் பரமேஸ்வரி, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் சிரஞ்சீவி ராஜா , புனிதா, நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Advertisement