தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக்குகள் மோதி விபத்து இளம்பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

முத்துப்பேட்டை, ஆக.30: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுநாதன் (36). இவரது மனைவி பொன்மணி (25). திருமணமாகி நான்கு வருடங்களாகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சுகுநாதன் சிங்கப்பூரில் பணியாற்றி வருவதால் மனைவி பொன்மணி ஒரு வருடத்திற்கு முன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

Advertisement

நேற்றிரவு பொன்மணி தனது ஸ்கூட்டியில் முத்துப்பேட்டைக்கு வந்து கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, பின்னர் பேருந்துக்காக நின்றிருந்த உப்பூர் காசடிக்கொல்லை கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகள் ராதிகா (20) என்பவரை ஏற்றிக்கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ஆலங்காடு ரவுண்டானா அருகே செல்லும்போது எதிரே முத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜெகபர் அலி(58) என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பொன்மணி சாலையில் தூக்கி வீசப்பட்டார். அதே நேரத்தில் முத்துப்பேட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார்.இதில் ராதிகா, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஜெபர்அலி ஆகியோர் படுகாயமடைந்து திருத்துறைப்பூண்டி மற்றும் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, எஸ்ஐ ராகுல் மற்றும் போலீசார் பொன்மணியின் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசுப்பேருந்து டிரைவர் செந்தில்குமரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News