முத்துப்பேட்டை பள்ளிவாசல் அருகே கழிவுநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும்
முத்துப்பேட்டை,ஆக.29: முத்துப்பேட்டை பள்ளிவாசல் கழிவுநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு தெற்குதெரு பேட்டை சாலையோரம் செல்லும் கழிவுநீர் வடிகால் குட்டியார் பள்ளிவாசல் முதல் அரபுசாகிப்பள்ளி வாசல் வரை ஆங்காங்கே சேதமாகியுள்ளன.
Advertisement
இதனை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டக்காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் அரபுசாகிப்பள்ளி வாசல் வரை எதிரே கழிவுநீர் வடிகால் சேதமாகி அதன் பகுதியில் உள்ள நுழைவு வாயில் சிறிய பாலம் உள்வாங்கி சேதமடைந்துள்ளன. சேதமான இந்த வடிகால்களை சீரமைத்து தருவதுடன் பள்ளி வாசல் முன்பாக சேதமாகி உள்வாங்கி உள்ள சிறிய பாலத்தை அகற்றிவிட்டு புதியதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement