திருத்துறைப்பூண்டியில் சூரிய மின் உற்பத்தி குறித்த கருத்தரங்கம்
திருத்துறைப்பூண்டி, செப்.27: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சூரிய மின் உற்பத்தி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கின் நோக்கம் குறித்து ரமேஷ் பேசினார். சூரிய மின் ஆற்றல் குறித்த திட்ட ஒருங்கிணைப்பாளர் பரத் பேசும் போது மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து இது போன்ற திட்டங்கள் மூலம் ரூ.30,000 முதல் ரூ.78,000 வரை மானியம் வழங்கி வருகிறது .
இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு பருவநிலை மாற்றங்களில் ஏற்படும் பாதிப்புகளை பேசினார். இக் கருத்தரங்கில் பாலம் சேவை நிறுவன செயலாளர் பாலம் செந்தில்குமார் முன்னிலை வகித்தார், சூரிய மின் சக்தி ஆலோசனை மையத்தின் ஆலோசகர் இராஜ வேல் , மாவட்ட பசுமை படை ஒருங்கினைப்பாளார் நடனம்,துரை ராயப்பன், தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கருத்தரங்கில் திருத்துறைப்பூண்டி தன்னார்வ அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.