இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேர்தல் கமிஷனை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வலங்கைமான், ஆக.27: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மத்திய பிஜேபி அரசுக்கு துணை போகும் தேர்தல் கமிஷனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரே வாக்காளர் பல இடங்களில் வாக்களித்து இருப்பதையும், வீட்டு முகவரி கதவு எண் ஜீரோ என்பதையும், 70 வயது ஆன முதியவர் முதல் வாக்காளராக சேர்த்திருப்பதையும் ஆதாரத்துடன் விளக்கி திருத்துறைப்பூண்டி நகர மன்ற உறுப்பினர் சங்கர வடிவேல், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரோஜர், திருவாரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மன்னை கோகுல வசந்த், வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். முன்னதாக ஐஎன்டியுசி தொழிற்சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த இளைஞர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.