திருத்துறைப்பூண்டியில் பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொசுவை ஒழிக்கலாம்
திருத்துறைப்பூண்டி, ஆக.22: பள்ளி மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொசுவை ஒழிக்கலாம் என தாவரவியல் ஆசிரியர் ெதரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக உலக கொசு தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வைத்தார் முதுகலை ஆசிரியர் தெய்வ சகாயம் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார்.
முதுகலை தாவரவியல் ஆசிரியர் பாக்யராஜ் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களால் பரவும் நோய்களால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் உலகின் கொடிய உயிரினத்தை எதிர்த்து போராடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பை இந்த நாள் நமக்காக வழங்கி உள்ளது. பள்ளிகள் போன்றவற்றின் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்தலாம் கொசுக்களால் பரவும் நோய்கள் மூலமாக ஆண்டுக்கு சுமார் பத்து லட்சம் பேர் வரை இருக்கிறார்கள் 20 கோடிக்கு மேல் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றார். முடிவில் ஆசிரியை சத்தியகலா நன்றி கூறினார்.