நீடாமங்கலம் அருகே ஆதனூர் ரயில்வே கேட் தண்டவாளம் பராமரிப்பு பணி
நீடாமங்கலம், ஆக.22: நீடாமங்கலம் அருகே ஆதனூர் ரயில்வே கேட் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் தஞ்சை சாலையில் உள்ளது ஆதனூர் ரயில்வே கேட். இங்குள்ள தண்டவாளத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெப்ரேஸ் ரோடு சீட்டுகளை பொக்கலின் இயந்திரம் மூலம் கழட்டி பராமரிப்பு வேலை நேற்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடந்தது .
தஞ்சை நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, மன்னார்குடி, மார்க்கத்தில் செல்லும் பஸ் மற்றும் வாகனங்கள் நீடாமங்கலம் அருகில் உள்ள கோவில்வெண்ணியில் இருந்து இருவழிச் சாலையில் நார்த்தாங்குடி வழியாக அனுப்பப்பட்டது மன்னார்குடி வாகனங்கள் நார்த்தங்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக அனுப்பப்பட்டது. இப்பணியில் தஞ்சை முதுநிலை பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில் சுமார் 30 பணியாளர்கள் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.