முத்துப்பேட்டை ஒன்றியம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டம்
முத்துப்பேட்டை,ஆக.20: முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் நடராஜன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைத் தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார்.
இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர், பாவலர் மீனாட்சி சுந்தரம் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு முன்னாள் ஒன்றிய தலைவர் இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பட்டதாரி ஆசிரியர் கருணாநிதி ஆரோக்கியராஜ் தலைமையாசிரியர் நித்தையன் ஆகியோர் பாவலர் மீனாட்சிசுந்தரம் இயக்க பணி குறித்து சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக வட்டாரப் பொருளாளர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.