திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
திருத்துறைப்பூண்டி, ஆக.20: திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை வகித்தார்.
Advertisement
ஆசிரியர்கள் பாக்யராஜ், பாஸ்கரன், எழிலரசி, சிவராமன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கருணாமூர்த்தி வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்கரபாணி பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் மதிப்பிலான ஜாமென்ட்ரி பாக்ஸ், பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட பொருட்களை வழங்க ஆசிரியர்கள் அனைவரும் வழங்கினார்கள்.முடிவில் ஆசிரியை அஜிதாராணி நன்றி கூறினார். இதில் ஆசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
Advertisement