நீடாமங்கலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு 1,000 டன் நெல் மூட்டைகள்
நீடாமங்கலம், செப்.19: நீடாமங்கலத்திலிருந்து திண்டுக்கலுக்கு 1,000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர், வலங்கைமான் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் செயல் பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அந்த நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ரயில் மூலம் அரவைக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நீடாமங்கலம், வலங்கைமான் திறந்தவெளி சேமிப்பு மையங்கள், மன்னார்குடி தாலுகா பகுதிகளில் உள்ள அரசு நேரடி கொள் முதல் நிலையங்களிலிருந்து 1,000 டன் சன்ன ரக நெல் மூட்டைகள் 80 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து 21 ரயில் பெட்டிகளில் அந்த நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்கு திண்டுக்கல் அனுப்பி வைக்கப்பட்டது.