திருத்துறைப்பூண்டியில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி அக்.16: பத்து அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட செயலர் கோபி சரவணன் தலைமை வகித்தார். அரசு பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் மருத பழனிவேல், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் இந்துமதி ஆகியோர் பேசினர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் துணைத் தலைவர் பாலகுமார், வட்டார செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் வட்டார செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர் கழகத்தின் சார்பில் அதன் மாநில பொருளாளர் துரைராஜ் கோரிக்கை உரையாற்றினர். போராட்டம் குறித்து அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் சுப்ரமணியன் பேசினார். முடிவில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.