முத்துப்பேட்டை கோவிலூரில் பேரிடர் மேலாண்மை குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு
முத்துப்பேட்டை, செப்.18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு துறையினர் சார்பில் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியை வனிதா தலைமை வகித்தார்.
Advertisement
இதில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் காலத்தில் எவ்வாறு நாம் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் எவ்வாறு மக்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள், தீயணைப்புத்துறையினர் கலந்துக்கொண்டனர்.
Advertisement